15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 64ஆவது லீக் ஆட்டத்தில், மயங்க் அகர்வால் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோத உள்ளது. இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீஸ் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தபோட்டியில் இந்த இரு அணிகளும் 30ஆவது முறையாக நேருக்கு நேர் எதிர்க்கொள்ள இருக்கிறது. இதுவரை நடந்த 29 போட்டிகளில் 13-ல் டெல்லி அணியும், 15-ல் பஞ்சாப் அணியும் வெற்றிப்பெற்று உள்ளது. இந்தநிலையில் இதுவரை இந்தத்தொடரில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 6 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், பஞ்சாப் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. எனவே இந்த தொடர் தரவுகளின் படி டெல்லி மற்றும் பஞ்சாப் வெற்றி தோல்விகளில் சமமாக இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி பஞ்சாப் அணியை முந்தியுள்ளது. இந்தநிலையில், இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதன் மூலமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்ற பரபரப்பான சூழலில் வெல்லப்போவது டெல்லி அணியா அல்லது பஞ்சாப் அணியா என்பதை இன்று மாலை பார்ப்போம்…