எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஏகே61 படத்தில் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க இருக்கிறார், அஜித். இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குமுன், இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.