டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், இதுகுறித்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘கொரோனா சூழல் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனால், மக்கள் பீதி அடைய வேண்டாம்’ என்றார். கடந்த இரண்டு தினங்களில் மட்டும் தொற்று பாதிப்பு 118 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.