7வது ஜூனியர் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான மோதும் அணிகள் ஜூன் 24ம் தேதி ஷூரிச்சில் நடைபெறும் குலுக்கலில் முடிவு செய்யப்படும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பிரேசில், சீனா, சிலி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.