கரூரில் திருவள்ளுவர் மைதானத்தில் எல்.ஆர்.ஜி. நாயுடு நினைவு கூடைப்பந்தாட்ட போட்டி தேசிய அளவில் நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு துவங்கிய இந்த போட்டி லீக் கம் நாக் அவுட் முறையில் இரவு பகலாக தொடங்கி தொடர்ந்து நடபெற்று வருகிறது. மேலும், இரண்டாவது நாளான நேற்று டெல்லி ஏர்போர்ஸ் அணியும், சென்ட்ரல் செகரெட்ரியேட் அணியும் மோதின. இதில் இரண்டுஅணிகளில் கோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு அணிகளின் வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, சிறிது நேரம் ஆட்டத்தினை நிறுத்தி வைத்தனர். பின்னர் ஆட்டத்தின் நடுவர்கள் ஒரு வீரருக்கு ரெட் கார்டு கொடுத்து விளையாட்டில் இருந்து தற்காலிகமாக டிஸ்குவாலிபைடுசெய்தனர். இந்த ஆட்டத்தில் 81 புள்ளிகளை டெல்லி ஏர்போர்ஸ் அணியினரும், சென்ட்ரல் செகரெட்ரியேட் அணியினர் 53 புள்ளிகளையும் பெற்றனர். இதனையடுத்து, கேரளா போலீசாரும், பேங்க் ஆப் பரோடா பெங்களூர் அணியினரும் ஆடினர். இதில் பேங்க் ஆப் பரோடா அணியினர் 64 புள்ளிகளும், கேரளா போலீசார் அணியினர் 60 புள்ளிகளையும் பெற்றனர். இதனை தொடர்ந்து இந்தியன் வங்கியும், டி.என்.பி.ஏ. டி.ஆர்.டபிள்யூ. சென்னை அணியினரும் விளையாடி வருகின்றனர். மேலும் அரையிறுதி வரும் 26 ம் தேதியும், இறுதி போட்டி 27 ம் தேதி அன்றும் நடைபெற உள்ளன.